ஓவியாவை காதலிப்பது போல் சில வாரங்கள் நடந்து கொண்ட ஆரவ், தற்போது மற்ற போட்டியாளர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு ஓவியாவை முற்றிலும் வெறுத்து ஒதுக்கி வருகிறார்.

நேற்று ஜூலி ஆரவிற்கு மசாஜ் செய்து கொண்டிருந்த போது, ஆரவ் உன்னிடம் 5 நிமிடம் பேச வேண்டும் என ஓவியா கூறுகிறார். அதற்கு ஆரவ் மசாஜ் செய்து முடித்ததும் உன்னிடம் பேசுவதாக கூறுகிறார். 

ஆனால் ஜூலி ஆரவிற்கு தொடர்ந்து மசாஜ் செய்து கொண்டே இருக்கிறார். பொறுமையாக காத்திருக்கும் ஓவியா ஒரு நிலையில் கோபம் அதிகமாகி அந்த இடத்தை விட்டு போகிறார். உடனே காயத்ரி அவள் என்ன செய்தாலும் நீ ரியாக்ட் பண்ணாதே என போட்டு கொடுக்கிறார். 

உடனே ஆரவ் இனி அவள் என்ன சொன்னாலும் நான் கேட்க போவது இல்லை. தான் வேண்டும் என்றே தான் இப்படி நடந்துகொண்டதாக கூறுகிறார். ஆராவின் இந்த செயலுக்கு ஓவியா ரசிகர்கள் தொடர்ந்து வலைதளங்களில் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.