julee love aarav

ஜல்லிக்கட்டில் அரசியல் தலைவர்களை பற்றி பேசி பிரபலமானவர் ஜூலி. இதை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனக்கு தானே பல ஆப்புகளை வைத்துக்கொள்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதில் ஒன்று தான் நேற்று நடந்த சம்பவம். இத்தனை நாள் ஓவியா ஆரவை காதலிப்பதாக கூறியதால், ஆரவ் பக்கம் கூட வராமல் இருந்த ஜூலி நேற்று "சிவாஜி" படத்தில் இருந்து" பூம்பாவா ஆம்பல் ஆம்பல்" என்கிற பாடலுக்கு நடனமாடிய படியே ஆரவை பார்த்துக்கொண்டிருந்தார். அதிலும் ஆரவ் அவருக்கு மீசை வரைந்து விடும்போது வைத்த கண் வாங்காமல் அவரை தின்னுவதுபோல் பார்த்தார்.

பின் காயத்ரியிடம் அக்கா கொஞ்சம் வாங்க உங்களிடம் பேசவேண்டும் என கூறி தனியாக அழைத்து சென்று கொஞ்சம் உங்க மைக்கை மூடிக்கொள்ளுங்கள் என கூறிய ஜூலி, எனக்கு என்னவோ தோணுது அக்கா என பேச ஆரம்பித்தார்.

அதற்கு காயத்ரி என்ன வென்று கேட்க, ஆரவை பார்த்தால் என்னவோ தோணுது, அவரை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என தோணுது... அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை, மதியம் மீசை வரைந்து விடும் போது கூட தன்னையே மறந்து நான் அவரை தான் பார்த்துக்கொண்டிருந்தேன்... எனக்கு சொல்ல தெரியல, ஆனா பிடித்திருக்கிறது என கூறியதும்... அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த காயத்ரி பிடிச்சா அது காதலா தான் இருக்கும் என கூறினார்.

இந்த செய்தியை காயத்ரி அனைவரிடமும் கூற, ஜூலிகே தெரியாமல் ஆரவ் உட்பட பலரும் அவரை அசிங்கமாக பின்னால் இருந்து விமர்சித்து வருகின்றனர்.