பிக் பாஸ் நிகழ்ச்சியில், மிகவும் சர்ச்சைக்குரிய பெண்ணாக இருப்பவர் ஜூலி. இவர் ஓவியாவிடம் நல்லவர் போல் நடந்து கொண்டு தற்போது அவருக்கே எதிரியாக மாறிவிட்டார்.

ஆனால், ஜூலி நடிக்கிறார்... அது ஒரு கேவலமான ஜென்மம் என்று அனைவரும் ஒதுக்கியபோது ஜூலிக்கு ஆறுதல் கூறி தோள் கொடுத்து உண்மையான தோழியாக நின்றவர் ஓவியாதான்.

இப்படி பார்த்துக்கொண்டு ஓவியாவுக்கே, காயத்திரியுடன் சேர்ந்து கொண்டு எப்படி அவளை வெளியேற்றுவது என்று திட்டம் தீட்டி வருகிறார். ஜூலியின் உண்மையான குணத்தை அறிந்துக்கொண்ட ஆரவ் திடீர் என கோபமாக மாறி சினேகனிடம் பேசும்போது... 

இந்த ஜூலி நேற்று அழுதபோது அனைவரும் அவளை கார்னெர் பண்ண ஓவியா தான் அவளுக்கு சப்போர்ட்டா இருந்தா, இந்த சனியனுக்கு அந்த நன்றி கூட இல்லாம அவளை வெளியேற்ற பாக்குது என கழுவி ஊத்தினார்.