ஜூலியின் பொய் முகத்தை குறும்படம் போட்டு உலகநாயகன் கமலஹாசன்  கிழித்தாலும் இன்னும் தவறை ஒப்புக்கொள்ளவில்லை.

ஜூலி இப்படி செய்வதால், மற்றவர்களுக்கு ஆரவ் மீதும் சந்தேகம் வந்தது, சந்தேகத்தை வளரவிடாமல் நேரடியாக பேசி தீர்த்துவிடலாம் என சக்தி, காயத்ரி, மற்றும் சினேகன் ஆகியோர் ஜூலி மற்றும் ஆராவை அழைத்து பேசினர்.

அப்போது ஆரவ் கூறியதை ஜூலி சொல்கிறார், பின் ஓவியா பேசியவற்றையும் ஜூலி கூறியபோது ஒரு நிலையில் உண்மை வெளிவருகிறது, இதனால் ஜூலி மேல் தான் தவறு இருக்கிறது ஓவியா மீது தவறு இல்லை என கூறி ஆரவ் ஓவியாவிற்காக மற்றவர்களிடம் பேசுகிறார்.

ஓவியா மற்றும் ஆரவ் மீது சந்தேகப்பட்ட மூன்று பேருக்கும்  கறியை பூசியது போல் ஆக, ஜூலி மேல் தான் தவறு உள்ளது என்பதை புரிந்து கொண்டனர். இதனை தொடந்து ஜூலியிடம் பேசிய ஆரவ் மீண்டும் இந்த கேமரா பதிவை 5 நிமிடத்திற்கு முன் கூட போட சொல்லி கேட்டால் நீ தான் அசிங்கப்பட்டு போவாய் என கோபமாக கூறினார்.