julee before elimination gayathiri shocking news

பிரபல தொலைக்காட்சியில், ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், டான்ஸ் மாஸ்டர் காயத்ரி கடந்த 10 நாட்களாக, ஜல்லிக்கட்டில் கத்தியே பிரபலமான ஜூலியை டார்கெட் செய்து பேச்சால் தாக்கி வந்தார்.

தற்போது இவருக்கு,100 நாள் இந்த வீட்டில் நிலைத்திருந்து பரிசு பெற்றே தீருவேன் என்று வந்திருக்கும் ஜூலியை பார்த்து பயம் வந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த தகவலை மிகவும் ரகசியமாக ஆரவ்விடம் தெரிவித்துள்ளார் நடிகர் சக்தி. இது குறித்து அவர் பேசுகையில், காயுவிற்கு 'எங்க நாம ஜூலிக்கு முன்னாடி எலிமினேஷன் ஆகிவிடுவோம் என பயம் வந்து விட்டது" அப்படி நடந்தால் அவளுக்கு அசிங்கமாகிவிடும் இதனை தன்னிடம் சூசகமாக காயத்திரி கூறியுள்ளதாகவும் ஆரவ்விடம் தெரிவித்தார்.

மேலும், ஜூலி முதலில் அமைதியாக தான் இருந்தாள், ஆனால் காயத்ரியும் ஆர்த்தியும் இணைந்து ஜூலியை "நீ நர்ஸ்" ஏன் இங்க வந்த, நீ நடிக்குற, போலி என்ன அவளை சீண்ட தான் அவள் லோக்கலாக இறங்கிட்டா என மிகவும் ரகசியமாக பேசியுள்ளனர். இதில் இருந்து எப்படியும் ஜூலியை ஆர்த்தியும், காயத்ரியும் வெளியேற்றும் நோக்கத்தில் தான் இனி வரும் நாட்களில் நடந்து கொள்வார்கள் என தெளிவாக தெரிகிறது.