julee and arthi hot figth
பிக் பாஸ் நிகழ்ச்சியில், அனைவரையும் கோள் மூட்டிக்கொண்டு மேக்அப் ராணியாக வலம் வருபவர் சாப்பாட்டு ராமன் குண்டு ஆர்த்தி.
இவர் நடன இயக்குனர் காயத்திரி ரகுராமுடன் சேர்த்துக்கொண்டு, எப்படி மற்றவர்களிடம் சண்டை இழுப்பது என்பதை மட்டுமே வேலையாக வைத்துள்ளார்.
முதல் நாளே ஜூலியிடம் சண்டை பிடித்த இவர், தற்போது ஜூலி நடித்துக்கொண்டே இருக்கிறார் அவள் உண்மையாக யாரிடமும் நடந்துக்கொள்ளவில்லை என அனைவரிடமும் கோள் மூடிக்கொண்டு திரிகிறார்.
இந்நிலையில் காயத்திரி தன்னை திட்டியதற்கு காரணம் கூட, ஆர்த்தி தான் என ஜூலி கூற அதற்கு கடுப்பான ஆர்த்தி முதலில் நீ நடிக்காதே, நீ நடிப்பதை பார்த்தால் தான் கடுப்பாக இருக்கிறது என கூறி ஜூலியிடம் சண்டை போடுகிறார்.
இதை கேட்டதும் பொங்கி எழுந்த ஜூலி, தன்னுடைய பொறுமையை இழந்து இங்க பாருங்க நான் இப்படித்தா அழுகை வந்தால் அழுவேன், சிரிப்பு வந்தால் சிரிப்பேன் என ஆவேசமாக பேசி என்னிடம் உங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்கிறார். இதற்கு ஆர்த்தி நீ பொய்யாக நடிப்பது தான் என்னுடைய பிரச்சனை என கூறி கத்துகிறார்.
மேலும் சக போட்டியாளர்களிடம் நாமெல்லாம் நடிப்பை விட்டு விட்டு வந்து இங்கு நிற்கிறோம் ஆனால் இவள் இங்கதான் நடிக்க ஆரம்பித்து இருக்கிறாள் என கூற அதற்கும் ஆவேசப்பட்ட ஜூலி, இனிமேல் அவங்க என்னை பொய்யாக நடிப்பவள் என்று சொன்னால் அவ்வளவு தான் என்பது போல் பேசுகிறார்.
அதே போல இப்போதெல்லாம் ஆர்த்தி ஜூலியை எப்போதும் பொய் சொல்றா, நடிக்கிறா என கூறி அவர் மீது எரிச்சலை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
