பல படங்களில் புகை பிடிப்பவராக நடித்த சிவாஜி கணேசன் வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்தார் எனும்போது சன்னி லியோன் வீரமா தேவியாக நடிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்கிற தடாலடி பதிலுடன் சன்னி லியோன் நடிக்கும் படத்தின் மீதிருந்த தடையை நீக்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பல ஆபாச மற்றும் முழு நிர்வாணப்படங்களில் நடித்து வாலிப வயோதிக அன்பர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றிருப்பவர் நடிகை சன்னி லியோன். இவரை கதாநாயகியாக வைத்து இயக்குநர் வி.சி.வடிவுடையான் ‘வீரமா தேவி’ என்னும் சரித்திரப் படத்தை சில வாரங்களுக்கு முன்பு துவங்கியிருந்தார்.  இந்த வீரம்மா தேவி மன்னர் முதலாம் ராஜேந்திரனின் மனைவி ஆவார். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இப்படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் பட அறிவிப்பு சமயத்தில், ஒரு புனிதமான ராணியின் பாத்திரத்தில் இவர் நடிப்பதா என்று கர்நாடகத்தில் சில இடங்களில் கலவரம் நடந்து சன்னி லியோன் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

இன்னொரு பக்கம் மதுரை செல்லூர் பகுதையைச் சேர்ந்த வழக்கறிஞர் அ.மு. சரவணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ‘வீரமா தேவி’ படத்துக்கு நிரந்தர தடை கோரி  பொதுநல வழக்கு போட்டிருந்தார். இன்று விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சுரேஷ்குமார் ஆகியோர்,’ நிஜ வாழ்க்கையையும் சினிமாவையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது.

பல படங்களில் புகை பிடிப்பவராக நடித்த சிவாஜி கணேசன் ‘வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிக்கவில்லையா? என்ற கேள்விகளுடன் வழக்கை ரத்து செய்தனர். ஆக புரட்சி வீராங்கணை ‘வீரமா தேவி’யாக சன்னி லியோனை தரிசிக்க காத்திருந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.