அல்டிமேட் ஸ்டார் அஜித் கடந்த பல வருடங்களாக எந்த மீடியாக்களையும் சந்திப்பதில்லை. படவிழாக்கள் மற்றும் எந்த திரைப்பட கொண்டாட்டங்களிலும் பங்கேற்பதில்லை என்பது பலருக்கும் தெரிந்தது தான் இப்படி அவர் மெல்ல மெல்ல மாறியது, குறித்து பத்திரியாக்கையாளர் ஒருவர் புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்து இருபது ஆண்டுகளுக்கு முன், அஜித் 'அமராவதி' முடித்த கையோடு பாம்குரோவ் ஓட்டலில் மீடியாக்களை மீட் செய்து, என் மாதிரி பல  நிருபர்களிடம் தனிமையாக பேசிய காலங்களையும்,  விருந்து உபசரிப்பு பண்புகளையும்,  அவ்வளவு எளிதில் சில மீடியா நண்பர்களால் மறந்திருக்க முடியாது.

அதேபோல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு,  அடையார் கேட் ஹோட்டலில் பத்திரிகையாளர்களை வருட வருடம் சந்தித்து அவர்களுக்கு, பார்ட்டி கொடுப்பார். அதில் தன் காதல் மனைவி ஷாலினியுடன் பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து உணவருந்திவிட்டு அனைவருடனும் சேர்ந்து சலிக்காமல் புகைப்படத்திற்கு ஒத்துழைப்பு தந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அப்படி ஒரு முறை அடையார் கேட் ஹோட்டலில் இரவு விருந்து நடைபெற்றது.  நானும் சென்றிருந்தேன்... தனது மனைவியுடன் அசத்தலாக வந்திருந்தார் அஜித்.  பிரஸ்மீட்டில் கார் ரேஸ் வீரரான தான் வெளிநாட்டு ரேஸ் ட்ரிப்புக்கு எக்கச்சக்க செலவாகிறது. எனவே பெரிய நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்ய வேண்டுமென கேட்டு பேசினார்.

பிரஸ்மீட் முடிந்ததும், ஒவ்வொரு பத்திரிக்கையாளராக சந்தித்து வந்த அஜித் என் அருகே வந்ததும், நான் அவரிடம் சினிமாவில் எல்லோருக்கும் கொடுத்து உதவும் வள்ளல் நாயகராக எங்களுக்கு தெரிந்த நீங்கள், பிறரிடம் ஸ்பான்சர் கேட்டு காரில் ரேஸ் செல்ல வேண்டுமா என காதோரம் கிசு கிசுதேன். உடனே ஏதோ யோசித்துவிட்டு, நீங்கள் சொல்வதும் சரிதான். நான் பரிசீலிக்கிறேன் என்று சொல்லி சென்றார்.  

அப்போது முதல் மெல்ல மெல்ல அஜீத்தின் ஸ்பான்சர் கேட்கும் கார் ரேஸ் விருப்பமும் தொலைந்தது. மீடியாக்களை சந்திப்பதும் குறைந்தது அன்று ஆல்டர்நேட் யோசித்த அஜித் இன்று நமக்கெல்லாம் அல்டிமேட் ஆக ஜொலிக்கிறார் என அந்த பத்திரிக்கையாளர் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.