திருமணத்திற்கு பின் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என சில காலம் திரையுலகை விட்டு ஒதுங்கியே இருந்த நடிகை ஜோதிகா, தற்போது மீண்டும் நடிக்க துவங்கி விட்டதால், எப்போதும் பிஸியாகவே இருக்கிறார். 

தற்போது ஜோதிகாவை வைத்து 'மொழி' படத்தை இயக்கிய இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில், மீண்டும் பல வருடங்களுக்கு பின் 'காற்றின் மொழி' படத்தில் நடித்து வருகிறார். 

இந்த திரைப்படம் ஏற்கனவே, நடிகை வித்தியா பாலன் நடிப்பின் இந்தியில் வெளியான 'துமாரி சூளு' என்கிற படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட உள்ளது. தீபாவளி பின் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஜோதிகாவின் இரட்டை சகோதரிகளாக உண்மையான இரட்டை சகோதரிகளான சீமாதனேஜா மற்றும் சிந்து சேகரன் ஆகியோர் நடித்துள்ளனர். இதே இரட்டை சகோதரிகள் தான் 'துமாரி சூளு' படத்தில் வித்யாபாலனுக்கும் சகோதரிகளாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த இரட்டை சகோதரிகள் ஜோதிகாவுடன் 'காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது முதல் முறையாக உள்ளது. 

ரேடியோ ஆர்ஜேவாக ஜோதிகா நடித்திருக்கும் இந்த படத்தில், நடிகர் விதார்த், ஜோதிகாவின் கணவராக நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு மற்றும் சிறப்பு தோற்றத்தில் சிம்பு ஆகியோர் நடித்துள்ளனர்.  ஒரு சிறு கேரக்டரில் யோகிபாபுவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.