அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 61வது படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தில் காஜல் அகர்வால், சமந்தா மற்றும் ஜோதிகா ஆகிய மூன்று நாயகிகள் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணத்தால் இந்த படத்தில் இருந்து ஜோதிகா தீடீர் என விலகினார்.

இந்நிலையில் இந்த படத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக ஓகே கண்மணி, இருமுகன், 24, போன்ற படத்தில் நாயகி நடித்த நித்யாமேனன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.