விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் இரண்டாவது முறையாக 61வது படத்தில் இணைத்துள்ளார். இந்த படத்தில் ஜோதிகா, சமந்தா, காஜல் அகராவால் என மூன்று நாயகிகள் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் பல ரசிகர்கள் விஜய்- ஜோதிகா நடிப்பில் வந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் என்பதால் இந்த படமும் மாஸ் ஹிட்டாகும் என இரட்டிப்பு சந்தோஷத்தில் இருந்தனர். 

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவும் ஜோதிகா சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், படத்தின் முழுக்கதையையும் கேட்டு, தன்னுடைய கதாபாத்திரத்தின் உடைகள் வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்தையும் 2 மாதங்களில் முடித்துவிட்டார் ஜோதிகா.

இந்நிலையில், படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே தான் படத்திலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்ட விஜயும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

 தற்போது ஜோதிகாவிற்கு பதில் வேறு ஒரு முன்னணி நடிகையுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம் படக்குழு மேலும் ஏன் ஜோதிகா இந்த படத்தை விட்டு விலகினார் என இது வரை எந்த ஒரு தகவலையுயம் கூறவில்லை.