நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டபின், திரையுலகை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்த ஜோதிகா '36 வயதினிலே' படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகில் ரீ எண்ட்ரி ஆனார். 

இந்த படத்தை தொடர்ந்து, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளாக தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் நடித்து வெளியான 'நாச்சியார்', 'மகளிர் மட்டும்', செக்க சிவந்த வானம்', 'காற்றின் மொழி' ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக குடும்ப தலைவிகள் பலர் ஜோதிகாவுக்கு தீவிர ரசிகர்களாக மாறிவிட்டனர்.

இந்நிலையில் தற்போது ஜோதிகா,  ராஜ் என்பவர் இயக்கி வரும் படம் ஒன்றில் ஆசிரியை வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.  இந்த படத்தின் பெயர் இன்னும் வைக்கப்பாடாத நிலையில் படத்தின் பூஜை இன்று ஆரம்பமானது. மேலும் இந்த படத்தில் முதல் முறையாக நடிகை ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் இணைந்து நடிக்க உள்ளார்.

மேலும் யோகிபாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.