இளையதளபதி விஜயுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்பது பல இளம் நடிகைகளில் கனவு என்று கூட சொல்லலாம், ஆனால் அட்லீ இயக்கும் விஜய் 61 படத்தில் விஜயுடன் நடிக்க முன்பு விஜயுடன் நடித்து குஷி, திருமலை போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்த ஜோ திருமணம் ஆகியும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தில் நடிக்க மிகவும் ஆர்வம் காட்டி வந்த ஜோதிகா சமீபத்தில் தான் இந்த படத்திலிருந்து விலகுவதாக தெரிவித்து வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் திருப்பி கொடுத்துவிட்டார்.

ஏன் இப்படி செய்தார் ஜோதிகா என பலரும் குழப்பத்தில் இருந்தனர் தற்போது இதுகுறித்து ஒரு சில காரணங்களும் சொல்லப்படுகிறது.

கணவர் சூர்யாவிற்கு விஜயுடன் நடிக்க முழு சம்மதம் தெரிவித்து இருந்தாலும் மாமனார் சிவகுமாருக்கு இதில் சுத்தமாக உடன்பாடு இல்லையாம், இதன் காரணமாக சில நாட்கள் ஜோவிடம் பேசாமல் இருந்தாராம். பின் இதை உணர்ந்த ஜோ சிவக்குமாரின் உணர்விற்காக படத்திலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.