கடந்த வருடம் ஜோதிகா ரீ- என்ட்ரி கொடுத்த '36 வயதினிலே' படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றது மேலும், பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாக அமைந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தை தொடர்ந்து தற்போது 'மகளிர் மட்டும் ' என்னும் படத்தில் நடித்து வருகிறார் ஜோதிகா....

இந்நிலையில், விஜய் அட்லீ இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிப்பதாக தகவல் வெளிவந்தது.

இதனால் ரசிகர்கள் 'குஷி' மற்றும் 'திருமலை' படத்தை அடுத்து இந்த படம் மூலம் இருவரும் இணைத்து நடிப்பதை பார்க்க ஆவலாக இருந்தனர்.

ஆனால் தற்போது இது பற்றி வெளியாகியுள்ள தகவலின் படி, ஜோதிகாவிடம் யாரும் அந்த படத்தில் நடிப்பதற்காக அணுகவில்லையாம்... 

இதன் காரணமாக ஜோதிகா ரசிகர்கள் கடும் அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.