jothika challenging nayantharaa
முன்னணி கதாநாயகிகள் தற்போது பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிப்பதை விட, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையும் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.

இந்த வரிசையில் கடந்த வாரம் வெளியாகி விஜய், அஜித், படங்களுக்கு நிகராக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் அறம். இந்தப் படத்திற்கு பிரபலங்கள், அரசியல் வாதிகள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பலர் சமூக கருத்துக்கொண்ட இது போன்ற படங்கள் நிறைய வர வேண்டும் என தங்களுடைய கருத்தைத் தெரிவித்து வருகின்றனர் . தற்போது அறத்திற்கு சவால் விடும் வகையில், ஜோதிகா நடித்து வரும் நாச்சியார் படத்தின் டீசர் அமைத்துள்ளது.

இந்தப் படத்தின் டீசரில், காதல், காமெடி, செண்டிமெண்ட், ஆக்சன் என பல்வேறு உணவுகளையும் வெளிப்படுத்தியிருப்பினும் அவர் பேசும் ஒரே ஒரு வார்த்தை ஜோதிகாவை பேச வைத்து ஒட்டு மொத்த திரையுலகத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்த படத்தில் ஜோதிகாவின் நடிப்பு கண்டிப்பாக நயன்தாராவிற்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என பலர் கிசுகிசுத்து வருகின்றனர்.
