இயக்குனர் மணிரத்னம், 'காற்று வெளியிடை' படத்தை தொடந்து இயக்கி வரும் திரைப்படம் 'செக்க சிவந்த வானம்' மல்டி ஹீரோக்களை வைத்து இந்தப்படம் தயாராகி வருகிறது. 

இதில் நடிகர் அரவிந்த் சாமி அரசியல் வாதியாகவும், சிம்பு இஞ்சினியராகவும், விஜய் சேதுபதி போலிஸ் அதிகாரியாகவும், நடிகர் அருண் விஜய் வில்லனாகவும் நடிக்கின்றனர். 

இந்தப்படம் குறித்து அவ்வப்போது மிகவும் சுவாரிஸ்யமான தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது நடிகை ஜோதிகா இந்த படத்தில் ஆணாதிக்கத்திற்கு எதிராக பெண்ணாக நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் ஜோதிகாவை தொடர்ந்து இந்த படத்தில், அதிதி ராவ், மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாச்சியார் படத்தை தொடர்ந்து ஜோதிகா நடித்து வரும் இந்த படத்திற்கு அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்பு ஏற்பட்டுள்ளது. ஜோதிகா போலீஸ் அதிகாரிக்கு பின் ஆணாதிக்கத்திற்கு எதிராக திரும்பியுள்ளது கண்டிப்பாக ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெரும் என கூறப்படுகிறது.