இயக்குனர் பாலாவின் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவும், அவருடைய கதைகள் கண்டிப்பாக வித்தியாசமானவைகளாக தான் இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அந்த விதத்தில் கடந்த வருடம் சசிகுமார், வரலட்சுமியை வைத்து கிராமிய கலையான, கரகாட்டத்தை மையப்படுத்தி தாரைதப்பட்டை என்கிற ஒரு படத்தை இயக்கினார்.

இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது நடிகை ஜோதிகாவை வைத்து பாலா ஒரு படம் இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஜோதிகா போலீஸ் வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் முழுக்க முழுக்க சென்னையிலே படமாக்கபடுகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஜோதிகாவுடன் இசைமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷ் நடிக்கவுள்ளாராம், இசைஞானி இளையராஜா இசைமைப்பில் தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவில் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படுகிறது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.