இயக்குனர் கல்யாண் இயக்கத்தில், நடிகை ஜோதிகா மற்றும் ரேவதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜாக்பாட்'.  இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆனந்த் குமார் ஒளிப்பதிவில் விஷால் சந்திரசேகர் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. 

ஆகஸ்ட் 2 ஆம் தேதி, அதாவது நாளை வெளியாகவுள்ள, இந்தப் படத்திற்கான பிரமோஷன் பணிகள் தீவிரமாக, கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இந்த படத்தின்,  முதல் காட்சி நாளை காலை 5 : 30  மணிக்கு பிரபல திரையரங்கில்  திரையிடப்படும் என பிரபல திரையரங்கம் ஒன்று அறிவித்துள்ளது.

மேலும், அதற்கான முன் பதிவையும் துவங்கியுள்ளது.  கடந்த அஜித், விஜய், ரஜினி, கமல், என குறிப்பிட்ட நடிகர்கள் படங்கள் மட்டுமே ரசிகர்களுக்காக அதிகாலை காட்சி, திரையிடப்பட்டு வந்த நிலையில், சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களுக்கும் அதிகாலை காட்சி திரையிடப்படுகிறது.

அந்த வகையில்,  நடிகை நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' மற்றும் ஓவியாவின் 90ml ஆகிய படங்கள் அதிகாலை காட்சி திரையிடப்பட்டது அதைத் தொடர்ந்து தற்போது நடிகை ஜோதிகா நடித்துள்ள 'ஜாக்பாட்' படத்தின் காட்சி திரையிடப்பட உள்ளது. இதனால், ஜோதிகா, நயன்தாரா, ஓவியாவை தொடர்ந்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.