என்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சி என்றாலே பலரும் விரும்பி பார்ப்பது  விஜய் தொலைக்காட்டையை தான். இதில் போட்டியாளர்களாக கலக்கிய பலர் தங்களுடைய திறமையை வெளிப்படுத்திய இன்று வெள்ளித்திரையில் ஜொலிக்கிறார்கள்.  

இந்நிலையில் தற்போது 'ஜோடி' நிகழ்ச்சி நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் புதுப்பொலிவுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நடன  நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக  ரோமா - ராமர், அணிலா - பிரிட்டோ, லோகேஷ் -மோனிகா, அஜீம் - ஷிவானி , நந்தினி - குரோஷி , விஷால் - ஸ்ரீது, மோனிகா -அம்ருத், குமரன் - சித்ரா , காயத்திரி - சங்கரபாண்டியன், உத்ரா - அட்ஜெஸ் , ரக்ஷன் - ஜாக்குளின் , பிக்பாஸ் புகழ் மகத் - யாஷிகா,  ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்தொகுப்பாளினி டிடி மற்றும் மா.கா.பா. ஆனந்த் ஆகியோர் தலையை ஏற்று பயிற்சியளிக்க உள்ளனர்.

போட்டி அரங்கேறும் அரங்கில் பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக மாறி மதிப்பெண் வழங்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை ரியோ மற்றும் பாவனா ஆகியயோர் தொகுத்து வழங்க உள்ளனர். எதையும் எப்போதும் புதுமையாக யோசித்து செயல்படுத்தும் விஜய் தொலைகாட்சி இந்த முறை ஜோடி நிகழ்ச்சியை வித்தியாசமாக நடத்துவார்கள் என ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.