இயக்குனர் கல்யாண் இயக்கத்தில், ஜோதிகா மற்றும் நடிகை ரேவதி நடித்து வெளியான 'ஜாக்பாட்' திரைப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக இதற்கு முன் வெளியான ஜோதிவாவின் படங்களில் இப்படம் தான் மிகவும் டல் என்பதால் செம்ம அப்செட்டில் இருக்கிறாராம் ஜோ. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தை இயக்கி முடித்த கையேடு, அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டார், இயக்குனர் கல்யாண். இந்த படத்தில் கதாநாயகியாக, கல்யாண் இயக்கிய 'குலோபகாவலி' படத்தில் நடித்த நடிகை ஹன்சிகா நடிக்க உள்ளார்.

ஏற்கனவே இவர் மஹா, படத்தில் வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் ஆக்க்ஷன் காமெடி கலந்த படமாக எடுக்கப்பட உள்ளது.

இந்த படத்தில் யோகிபாபு, மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன் என ஜாக்பார்ட் படத்தில் நடித்த காமெடி நடிகர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் குறித்த மற்ற தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.