Asianet News TamilAsianet News Tamil

ஜோக்கர் நடிகை காயத்ரிக்கு டும் டும் டும்...!

jocker movie heroine marriage
jocker movie heroine marriage
Author
First Published Apr 6, 2018, 2:35 PM IST


கடந்த 2016 ஆண்டு இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான 'ஜோக்கர்' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டும் இன்றி சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. 

இந்த படத்தின் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை 'காயத்ரி கிருஷ்ணன்'. இப்படத்தில் அரசுக்கு எதிராக போராடும் போராளி பெண்ணாக நடித்து அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்றார். jocker movie heroine marriage

மேலும் இவர் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ள 'மேற்கு தொடர்ச்சி மலை' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் இவர் தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காயத்ரி திருவனந்தபுரத்தை சேர்ந்த சினிமா ஒளிப்பதிவாளர் ஜீவன்ராஜ் என்பவரை திருமணம் செய்துக்கொள்ள உள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2 ஆம் தேதி மிகவும் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இவர்களுடைய திருமணம் இந்த ஆண்டு கடைசியிலே அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ நடைபெறும் என்று கூறியுள்ளார்.jocker movie heroine marriage

இது காதல் திருமணம் என்றாலும் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற உள்ளதாகவும், திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து தான் நடிக்க உள்ளதாகவும் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios