மலையாள திரையுலகில் சிறந்த கதை, மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் ஹனி ரோஸ்.  இவர் கடந்த 2005ஆம் ஆண்டு 'பாய்பிரண்ட்' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் 'முதல் கனவே', ஜீவாவிற்கு ஜோடியாக 'சிங்கம் புலி' உள்ளிட்ட மூன்று படங்களில் மட்டுமே நடித்தார்.

இவர் திரையுலகில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான தாகவும், தன்னுடைய பெற்றோர் எப்போதும் கூடவே இருந்ததால் அதிலிருந்து தப்பித்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும் சில காலம் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து மீண்டும் திரையுலகின் பக்கம் வரும்போதும் சிலர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அப்போதும் தன்னுடைய பெற்றோர் தான் தன்னை காப்பற்றினார்கள் முதல்முறையாக கூறியுள்ளார்.

ஆனால் வளர்ந்த நடிகை ஆனதும் பாலியல் தொந்தரவுகள் யாரும் கொடுப்பதில்லை என்றும், அறிமுகமாகும் நடிகைகளுக்கு மட்டுமே இதுபோல் பாலியல் தொந்தரவுகள் அதிக அளவில் கொடுக்கப்பட்டதாகவும் ஹனி ரோஸ் கூறியுள்ளார். மேலும் தற்போது திரையுலகில் இதுபோன்ற பிரச்சனைகள் குறைந்திருப்பதாகவே கருதுவதாகவும் இவர் கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.