இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில், சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் பாபி சிம்பாவிற்கு தேசிய விருதும் கிடைத்தது. 

இந்த நிலையில் தமிழில் சூப்பர்ஹிட்டான 'ஜிகர்தண்டா' திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். 

இந்த படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், பாபிசிம்ஹா நடித்த வேடத்தில், தெலுங்கு நடிகர்  வருண்தேஜ் ஒப்பந்தமாகியுள்ளார். அதே போல்  சித்தார்த் நடித்த கேரக்டரில், நடிகர் அதர்வா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் மூலம் அதர்வா தெலுங்கு திரையுலகில்  அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரிஷ் ஷங்கர் இயக்கவுள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனம் 14 ரீல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது