jewells thieft for actor vishal home
நடிப்பு, தயாரிப்பு என எப்போதுமே பிஸியாக இருக்கிறார் நடிகர் விஷால் மேலும் ஒரு பக்கம் அவருடைய தேவி அறக்கட்டளைகள் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
இவருடைய வீடு சென்னை அண்ணாநகரில் உள்ளது. இவரது வீட்டில் இருந்த தங்கமோதிரம், கம்மல் மற்றும் வளையல்கள் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது.
மேலும் வீட்டில் இருந்த யாரோ திருடிச்சென்று விட்டனர் என்று கூறி விஷாலின் மேலாளர் ரகுபதி அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்தப் புகாரில், ‘புஷ்பா என்ற பெண் விஷால் வீட்டில் வேலை செய்து வந்ததாகவும். அவர் தற்போது வேலைக்கு வரவில்லை என்றும் அவர் மீது தான் சந்தேகம் உள்ளது’ என்றும் கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
