இந்திய கர்நாடக இசை கலைஞரும், திரைப்பட பாடகருமான கே.ஜே.யேசுதாஸ். இவர் கடந்த 50 ஆண்டு கால திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமசுகிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி,அராபிய மொழி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய பல மொழிகளில் 40,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்.
சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் வகையில் வேறு எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில் ஏழு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார்.

சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப்பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் ஏற்கனவே இசைப்பேரறிஞர் விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம பூசண் விருது,சாகித்திய அகாதமி விருது,சங்கீத கலாசிகாமணி விருது, என பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
இந்நிலையில் மேலும் அவரை சிறப்பிக்கும் விதமாக பத்ம வி பூஷன் விருது வழங்கி கௌரவித்துள்ளது மத்தியஅரசு, பத்மவிபூஷன் விருது பெரும் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுக்கு நியூஸ் பாஸ்ட் சார்பாக வாழ்த்துக்கள்.
