ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்த போது, அவர்களுக்கு உறுதுணையாக தமிழன் என்கிற உணர்வோடு இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதாக களத்தில் குதித்தார் நடிகர் லாரன்ஸ்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பல்வேறு பிரச்சனைகள் வந்த போதிலும், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் வலியுறுத்தல் நிறைவேற்ற பட்டு, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டமும் கொண்டு வரப்பட்டது.

மேலும் இந்த போராட்டத்திற்காக தான் ஒரு கோடி வரை செலவு செய்ய தயார் என கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு பெட்ஷீட் , உணவு , மொபைல் டாய்லெட் என உதவியவர் நடிகர் லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், லஞ்சகம் கொடுத்து போராட்டம் நடத்தியுள்ளார் லாரன்ஸ் என கூறி அவரையும் ஹிப் ஹாப் ஆதியையும் வெளுத்து வாங்கியுள்ளார். தான் ஒரு கோடி கொடுத்தேன் என கூறும் லாரன்ஸ் யாரிடம் கொடுத்தார் என பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதற்கு லாரன்ஸ் என்ன பதில் கொடுப்பார் என பொறுத்துதான் பார்க்க வேண்டும்...