jayam ravi speech in press meet

முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருக்கும் நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்துக்கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது, காடுகளை சார்ந்து எடுக்கப்பட்டுள்ள வனமகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை அன்று திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக, பழப்பெறும் பாலிவுட் நடிகர் தீலிப் குமாரின் பேத்தி சயீஷா அறிமுகமாகியுள்ளார்.

மேலும் தம்பி ராமைய்யா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி படத்தின் மூலம் மிக பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் எ.எல்.விஜய் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில், ஜெயம் ரவியின் தோற்றம் முதற்கொண்டு அனைத்துமே வித்தியாசமாக உள்ளதால் இந்த படத்திற்கு இப்போதே அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது அப்போது பேசிய ஜெயம் ரவி. தான் நடித்ததிலேயே மிக அதிகமான ஆக்சன்களை கொண்ட திரைப்படமாக இது இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் அதிக அளவில் பேசப்படும் என்கிற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும். இயக்குனர் விஜயால் மட்டும் தான் இதுபோன்ற படங்களை இயக்க முடியும் எனவும் கூறி விஜயை புகழ்ந்து தள்ளினார்.

அதே போல், இந்த திரைப்படம் நான் நினைக்கும் அளவிற்கு வெற்றி பெற்றால், ஒரு ருபாய் கூட வாங்காமல் விஜய்க்கு ஒரு படத்தை நடித்து கொடுக்க தயார் என்று மேடையிலேயே சபதம் எடுத்து கொள்வது போல் தெரிவித்தார். ஜெயம் ரவியின் இந்த பேச்சு அனைவரையும் பிரமிக்க வைத்தது.