இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கவுள்ள 'டிக் டிக் டிக்' திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன், நிவேதா, ரமேஷ் திலக் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த தியோரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் ஜெயம் ரவியின் குடும்பத்தில் இருந்து தற்போது இன்னொரு நபர் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை ஜெயம் ரவியின் மகன் ஆரவ் தான்.

ஜெயம் ரவியின் மகன் ஆரவ் அவர் நடிக்கவுள்ள 'டிக் டிக் டிக்' என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் படத்திலும் ஆரவ், ஜெயம் ரவியின் மகனாக நடிப்பாரா அல்லது வேறு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.

ஏற்கனவே அவருடைய சகோதரர் மோகன் ராஜா நடிகர் மற்றும் இயக்குனராகவும், ஜெயம் ரவியின் தந்தை மோகன் எடிட்டராகவும் திரையுலகில் ஜொலித்து வருவது குறிப்பிடத்தக்கது.