நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'கோமாளி' திரைப்படம், ரசிகர்களின் நல்ல விமர்சனங்களை பெற்று, வெற்றிகரமாக திரையரங்கங்களில் ஓடிக்கொண்டிருக்கியது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார். இயக்குனர்,  பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்த இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து, தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் ஜெயம் ரவி. அடுத்ததாக இவர், தனி ஒருவன் 2 படம் குறித்து, ஏதேனும் சொல்லுவார் என எதிர்பார்த்த நிலையில் அடுத்ததாக இயக்குனர் அஹமத் இயக்கத்தில் நடிக்க உள்ள படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது .

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றைய தினம் அஸெர்பைஜான் நாட்டில் நடந்தது. இதில் நடிகை டாப்ஸி கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.