நடிகர் ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் தன்னை இடித்தவுடன் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து சந்தோஷத்தை வெளிப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. 

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. பான் இந்தியா திரைப்படமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆகிய மொழிகளில் உருவாக்கி உள்ள இப்படத்தின்... ப்ரோமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு மேல் 'பொன்னியின் செல்வன்' பட நடிகர் - நடிகைகள் தீவிரமாக படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்டு வருகிறார்கள். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி அவ்வபோது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. சென்னை, கொச்சின், கோயம்புத்தூர், ஹைதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் நடந்த புரோமோஷன் நிகழ்ச்சியில், ஜெயம் ரவி, திரிஷா, விக்ரம், ஐஸ்வர்யா லட்சுமி, கார்த்தி, சோபிதா, ஆகியோர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், 'பொன்னியின் செல்வன்' படத்தில் நந்தினி என்கிற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் சில பர்சனல் காரணங்கள் காரணமாக கலந்து கொள்ளவில்லை என கூறப்பட்டது.

தகதகவென மின்னும் கிளாமர் உடையில்..! சலிக்காமல் கவர்ச்சி தீ மூட்டும் யாஷிகா! பார்த்தாலே கிக் ஏற்றும் போட்டோஸ்!

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம், ஹைதராபாத்தில் நடந்த இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்துகொண்டு அசத்தினார் ஐஸ்வர்யா ராய். இந்த நிகழ்ச்சியின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தின் வீடியோ தான் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. நடிகை ஐஸ்வர்யா ராய் ஜெயம் ரவியுடன் கைகோர்த்தபடி மேடைக்கு வந்த போது, தெரியாமல் ஜெயம் ரவியை... இடித்து விட்டார் ஐஸ்வர்யா ராய். அவரிடம் இடி வாங்கியதை மிகவும் உற்சாகத்துடன் வெளிப்படுத்தியுள்ளார் ஜெயம் ரவி. இந்த வீடியோ படு வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

பயத்தில் பதறும் சீயான் விக்ரம்! சீண்டி கொண்டே இருந்ததால் பொங்கிய பா.ரஞ்சித்! படப்பிடிப்பில் வெடித்த பிரச்சனை!

இன்றிய தினம் பொன்னியின் செல்வன் பட குழுவினர், மும்பையில் நடக்கும் புரோமோஷன் பணியில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…