நடிகர் ஜெயம் ரவி நடித்த அடங்கமறு படம் சமீபத்தில் வெளியாகி  வசூல் ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. 

நடிகர் ஜெயம் ரவி நடித்த அடங்கமறு படம் சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தை தொடர்ந்து தற்போது 'கோமாளி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை அடுத்து இயக்குனர் மோகன் ராஜா இயக்கும், 'தனி ஒருவன்' பார்ட் 2 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை முடித்துவிட்டு ஸ்க்ரீன் சீன் மீடியா பட நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களில் வரிசையாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

இதனை அந்த பட நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது. இந்த மூன்று படத்திற்கும் சம்பளம் வாங்குவதற்கு பதிலாக ஜெயம்ரவிக்கு தயாரிப்பு தரப்பில் இருந்து, சென்னை போயஸ்கார்டனில் ஜெயலலிதா மற்றும் ரஜினி வீடுகளுக்கு பக்கத்தில் ரூபாய் 20 கோடி மதிப்புள்ள பங்களாவை எழுதி வைத்ததாக தகவல் பரவியது.

முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் போயஸ் கார்டனில் ஜெயம் ரவிக்கு பங்களாவா? என வலைதளங்களில் பலரும் வியந்து பேசினார். 

இந்நிலையில் இப்படி பரவிய தகவல் குறித்து, ஜெயம் ரவி விளக்கம் அளித்துள்ளார் . இது குறித்து அவர் கூறுகையில், போயஸ் கார்டனில் வீடு பெற்றதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என்றும் ஒரு தகவலை வெளியிட முன் சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் பெற்று வெளியிடுமாறும் இரண்டு நாட்களாக பரவி வந்த ஜெயம் ரவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.