படமாகிறது “ஜெ“ வின் வாழ்க்கை வரலாறு ...! “அம்மா “ பெயரையே சூட்டுவதாக தகவல் ....!!!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை , 3 மொழிகளில் படமாக்க திட்டமிடபப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அம்மா அவர்களின் , வாழ்க்கை வரலாறு, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படமாக எடுக்க உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.இந்த படத்தை பிரபல தெலுங்கு சினிமா உலகின் பிரபல இயக்குனர் தாசரி நாராயண ராவ் இயக்குவதாகவும், மேலும், அம்மா என்ற பெயரிலேயே ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றது.

மேலும், ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என்ற ஆவல் எழுந்துள்ளது. இந்நிலையில், ரம்யா கிருஷ்ணன் அல்லது திரிஷா , இந்த ரோலில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக சினி வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன....