Asianet News TamilAsianet News Tamil

இன்னைக்கு இதுதாங்க அடேங்கப்பா நியூஸ்... ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை இயக்கும் லிங்குசாமி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்குவதற்கு ஏற்கனவே ஏகப்பட்ட  போட்டி இருந்துவரும் நிலையில் திவாகரனின் மகன் ஜெயானந்த் திவாகர் புதிய குண்டு ஒன்றைப்போட்டிருக்கிறார்.

Jayalalithaa Biography Movie...Lingusamy directing
Author
Chennai, First Published Oct 23, 2018, 1:15 PM IST

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்குவதற்கு ஏற்கனவே ஏகப்பட்ட  போட்டி இருந்துவரும் நிலையில் திவாகரனின் மகன் ஜெயானந்த் திவாகர் புதிய குண்டு ஒன்றைப்போட்டிருக்கிறார். Jayalalithaa Biography Movie...Lingusamy directing

இன்று ம.நடராசனின் 76 வது பிறந்தநாளை முன்னிட்டு தனது முகநூலில் ‘அம்மாவின் வரலாற்றுப் படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தில் நடராஜன், சசிகலா ஆகியோரின் கதாபாத்திரங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும், தமிழக அரசியல் தலைவர்கள் பலருடன் கலந்து ஆலோசித்து இப்படத்தை லிங்குசாமி இயக்குவார் என்றும் ஜெயானந்த் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Jayalalithaa Biography Movie...Lingusamy directing

ஏற்கனவே மிஷ்கினின் உதவியாளர் பிரியதர்ஷினி ‘த அயர்ன் லேடி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கி வருகிறார். இன்னும் சிலரும் தாங்களும் ஜெ’ வரலாற்றைப் படமாக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். Jayalalithaa Biography Movie...Lingusamy directing

இந்நிலையில் ஜெயானந்தின் அறிவிப்பால் ‘த அயர்ன் லேடி’ முடக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இச்செய்தி குறித்து இயக்குநர் லிங்குசாமி வட்டாரத்தில் விசாரித்தபோது, இயக்குநர் ஜெயானந்தின் நெருங்கிய நண்பர் என்பது உண்மைதான். ஆனால் ஜெ’ வரலாறு குறித்த படம் இயக்கப்போவது சம்மந்தமாக இன்னும் எங்களிடம் பகிர்ந்துகொள்ளவில்லை என்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios