முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு தமிழகத்துக்கும், அகிலத்துக்கும் பேரிழப்பு என திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு தனது புகழஞ்சலியில் கூறினார்.
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு கலைப்புலி தாணு எழுதியுள்ள இரங்கற்பா:
மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி டாக்டர் அம்மா அவர்கள்
அன்பில் ஒரு தாயாகவும்
அழகில் ஒரு தேவதையாகவும்
அறிவில் மகா மந்திரியாகவும்
ஆதரவில் கருணை உறவாகவும்
கண்டிப்பில் நேர்மை ஆசிரியராகவும்
அன்பு, பாசம், நேசம், தியாகம்
அக்கறை, அரவணைப்பு என எல்லா உணர்வுகளையும்
கொண்டு வாழ்ந்த தெய்வம் அம்மா!
அவர்களின் இழப்பு தமிழகத்துக்கும் அகிலத்துக்கும் பேரிழப்பாகும்.
அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை
இறைஞ்சுகிறேன்!
