jayalalitha co-artist begging in vadapazhani temple
கானல் நீர் போன்ற வாழ்க்கையை உடையவர்கள் திரையுலகத்தை சேர்ந்தவர்கள், திரையில் நடிகர் நடிகைகள், நமக்கு பிரதிபலிப்பதை போல நிஜத்திலும் அப்படியே அவர்கள் வாழ்வதில்லை என்பது தான் உண்மை.
பகட்டான வாழ்க்கை, பலகோடி சொத்துக்களுடன் வாழும் நட்சத்திரங்கள் கூட தெருவிற்கு வந்த கதைகள் இருக்கத்தான் செய்கிறது.
இந்த நிலையில் ஒரு காலத்தில் ஜெயலலிதா, சிவகுமார் ஆகியோர்களின் படங்களின் குரூப் டான்சராகவும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இணைத்து நடித்த ஜமுனா என்பவர் தற்போது வடபழநி கோவிலில் பிச்சை எடுக்கின்றார்.
தற்போது 80வயதான ஜமுனா இதுகுறித்து கூறும் போது,
சிவாஜி கணேசன், ஜெயலலிதா நடித்த 'மோட்டார் சுந்தரம்பிள்ளை', சிவாஜி கணேசன், சாவித்திரி நடித்த 'சரஸ்வதி சபதம்', அவ்வையார் உள்பட பல படங்களில் குரூப் டான்சராக நான் நடனம் ஆடியுள்ளேன், அதே போல முதலமைச்சர் ஜெயலலிதாவுடனும் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
மேலும் என்னுடைய கணவர் மேக்கப்மேனாக இருந்தவர். குரூப் டான்சராக இருந்தபோது நான் வசதியாக தான் இருந்தேன், கணவர் மரணமடைந்த பின்னர், குடும்பத்தினர் ஒவ்வொருவராக வெறுத்து ஒதுக்கியதால் தற்போது பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் சிவகுமார், கமல்ஹாசன் போன்றவர்கள் தனக்கு பணம் கொடுத்து உதவி செய்தனர். ஆனால் அதன்பின்னர் அவர்களிடம் நான் உதவிகள் கேட்டு செல்லவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், தன்னால் எழுந்து நடமாட கூட முடியாமல் கையேந்தும் நிலையில் இருப்பதாகவும், தனக்கு விஷால் உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பல்வேறு கலைஞர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் விஷால் பழம்பெரும் நடிகையான இவருக்கு உதவி செய்வாரா பொறுத்திருந்து பாப்போம்...
