மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, மூன்று இயக்குநர்களால் கடும் போட்டிகளுக்கு இடையே படமாக்கப்பட்டு வருகிறது.

இயக்குனர் ஏ.எல்.விஜய் 'ஜெயலலிதாவின்' வாழ்க்கை வரலாறு படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டதும், இயக்குனர் பாரதிராஜாவும், இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக பணியாற்றிய ப்ரியதர்ஷினியும் தாங்களும், ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்க உள்ளதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தற்போது இயக்குனர் பிரியதர்ஷினி, தான் இயக்க உள்ள, ஜெ.வாழ்க்கை வரலாறு படத்தின், முதல் பார்வையை வெளியிட்டுள்ளார். 

 

இந்த படத்திற்கு 'The Iron Lady ' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் சட்ட சபையின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. போஸ்டரின் மேல ஜெயலலிதாவின் கொள்கை வசமான 'மக்களால் நான் மக்களுக்காக நான்' என்னும் வசனமும் உள்ளது. இந்த படத்தை பேப்பர்டாலி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. 


 

பிரியதர்ஷினி இயக்கம் இந்த படத்தில், ஜெயலலிதாவாக நடிகை நித்திய மேனனும் , சசிகலாவாக வரலட்சுமியும் நடிக்க வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த அதிகார பூர்வ தகவலும் வெளியாவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.