மும்பையில் இருந்து சென்னைக்கு திடீர் விசிட் அடித்த ஷாருக்கான், நேற்று இரவு சென்னையில் உள்ள நடிகை நயன்தாராவின் வீட்டுக்கு சென்றுள்ளார். 

ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் கடந்த மாதம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்த இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு வசூலிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. அதன்படி மூன்றே வாரத்தில் இப்படம் ரூ.900 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து உள்ளது. விரைவில் இப்படம் ரூ.1000 கோடி வசூலித்து புதிய மைல்கல்லை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பதான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜவான். அட்லீ இயக்கும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க, நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜவான் பட ஷூட்டிங்கும் படுஜோராக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... அட்வைஸ் பண்ணியது குத்தமா... கமல்ஹாசனை போடா வாடானு பேசி அசிங்கப்படுத்தினாரா அசீம்? - வீடியோவால் வெடித்த சர்ச்சை

Scroll to load tweet…

இந்நிலையில், மும்பையில் இருந்து சென்னைக்கு திடீர் விசிட் அடித்த ஷாருக்கான், நேற்று இரவு சென்னையில் உள்ள நடிகை நயன்தாராவின் வீட்டுக்கு சென்றுள்ளார். நடிகை நயன்தாராவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தைகளை பார்ப்பதற்காக சென்னையில் உள்ள நயன்தாராவின் வீட்டுக்கு வந்துள்ளார் ஷாருக்கான். 

ஷாருக்கான் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அங்கு குவிந்தனர். இதையடுத்து காரில் ஏறி செல்லும் முன் ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு சென்றார் ஷாருக். அவரை வழியனுப்பி வைக்க நடிகை நயன்தாராவும் அங்கு வந்திருந்தார். இதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஜவான் படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் மும்பையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... அழகில் சொக்க வைக்கும் அஞ்சலி நாயரின் அழகான புகைப்படங்கள்!