janvi kapoor wrote the letter for mother

நடிகை ஸ்ரீதேவியின் மறைவு அவருடன் பழகிய நண்பர்களுக்கும், பணியாற்றிய பிரபலங்களுக்கும் எந்த அளவிற்கு வலியை கொடுத்துள்ளதோ அதை விட பல மடங்கு வேதனையையும், துயரத்தையும் கொடுத்துள்ளது அவருடைய குடும்பத்தினருக்கு என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இன்று தன்னுடைய 21வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இத்தனை வருடம் தன்னுடைய தாயின் அறைவனைபில் பிறந்த நாள் கொண்டாடிய ஜான்வி இன்று தாயை இழந்து நிற்கிறார்.

மேலும் மறைந்த தாய் ஸ்ரீதேவிக்காக ஒரு கடிதமும் எழுதியுள்ளார்...!

அதில் என் மனம் எதோ இழந்து விட்டதை உணர்த்திக்கொண்டே இருக்கிறது, இருப்பினும் அதை கடந்து வாழ வேண்டும் என எனக்கு தெரியும். இந்த வெறுமையிலும் கூட உங்களில் அளவில்லாத பாசத்தை உணர்கிறேன். இந்த தாங்க முடியாத வழியிலும் துயரத்திலும் இருந்து நீங்கள் என்னை பாதுகாப்பதை என்னால் உணர முடிகிறது.

கண்களை மூடும் ஒவ்வொரு கணமும், நல்லவை மட்டுமே எனக்கு நினைவிற்கு வருகிறது. நீங்கள் மிகவும் நல்லவர் மிகவும் பரிசுத்தமானவர் அன்பால் நிறைந்தவர். 

அதனால் தான் என்னவோ காலம் உங்களை மிக விரைவில் அழைத்துச் சென்றுவிட்டது. இருப்பினும் நீங்கள் எங்களோடு இத்தனை காலம் இருந்தது எங்களுடைய பாக்கியம். 

என் நண்பர்கள் அடிக்கடி நான் சந்தோஷமாக இருப்பதாக கூறுவார்கள். இப்போது தான் தெரிகிறது என்னை மிகவும் சந்தோஷமாக பார்த்துக்கொண்டது நீங்கள் தான் என்று. 

நீங்கள் என் உயிரின் ஒருபாதி. உங்களை பெருமைப்படுத்துவதே இனி என் நோக்கம். எனக்குள்ளும், குஷி, அப்பா மனதிலும் எப்போதும் நீங்கள் இருக்கிறீர்கள் அதை என்னால் நன்றாக உணர முடிகிறது என்று கண்ணீர் கலந்த கடிதம் ஒன்றை ஜான்வி பிறந்தநாளான இன்று தன்னுடைய தாய்க்கு எழுதி பதிவிட்டுள்ளார். 

View post on Instagram