தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் திரையுலகில் அறிமுகமான ஒரு சில வருடங்களிலேயே, விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.

ஏற்கனவே தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்த இவர், தற்போது பாலிவுட் திரையுலகிலும் அறிமுகமாக உள்ளார். விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தில், பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.  இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த நிலையில் நடிகையும், ஸ்ரீ தேவியின் மகளுமான ஜான்வி கபூர் அவருடைய டுவிட்டர் பக்கத்தில், கீர்த்தி சுரேஷை பெருமை படுத்தும் விதத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

இந்த பதிவில்... "உங்களுடைய மகாநதி படத்தில் இருந்து உங்களை கவனித்து வருகிறேன், நீங்கள் என் தந்தையின் படத்தில் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து வியப்பாக இருக்கிறது.   வாழ்த்துக்கள் என கீர்த்தி சுரேஷ் புகைப்படம் போட்டோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். இவரின் இந்த கருத்தை பலர் வரவேற்று வருகிறார்கள்.