நடிகை ஸ்ரீதேவி:

பிரபல நடிகை ஸ்ரீதேவி, கடந்த மாதம் 24ஆம் தேதி துபாயில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி மரணமடைந்தார். அழகிலும், நடிப்பிலும் ஈடு இணையில்லா நடிகையாக திகழ்ந்த இவருடைய மரணம் ஒட்டு மொத்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை மீள முடியாத துயரத்தில் ஆழ்த்தியது. 

இவருடன் இணைந்து பணியாற்றியவர்களுக்கே இப்படி என்றால் இவருடைய குடும்பத்தினர் நிலை...? எப்போதும், மனைவியை விட்டு பிரியாமல் கூடவே இருந்த கணவர் நிலைக்குலைந்து போனார். மகள்கள் இருவரும் எப்போதும் அழுதுக்கொண்டே இருந்ததனர். 

ஜான்வி பிறந்த நாள்:

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி பிறந்த நாள் வந்தது. அம்மாவை இழந்த இவர் பிறந்த நாள் அன்று எந்த ஒரு கொண்டாட்டதிலும் பங்கேற்காமல் முதல் முறையாக வீட்டிலேயே முடங்கினார். மேலும் தன்னுடைய அம்மாவிற்காக கண்ணீரோடு எழுதிய ஒரு கடிதத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். 

பிறந்த நாள் கொண்டாட்டம்:

மெல்ல மெல்ல தன்னுடைய அம்மாவை இழந்த சோகத்தில் இருந்து மீண்டும் வரும் இவர், நேற்று முதியோர் இல்லத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். அங்கு இருந்த அனைத்து முதியோர்களிடமும் வாழ்த்துக்களையும் பெற்றார். இவர்களுடைய வாழ்த்தை தன்னுடைய அம்மாவின் வாழ்த்தாகவே கருதி மகிழ்ச்சியோடு இருந்தாராம் ஜான்வி. 

இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்ட குடும்ப நண்பர்கள் கூறுகையில் ஸ்ரீதேவியின் மறைவிற்கு பின் இன்று தான் ஜான்வி முகத்தில் புன்சிரிப்பை பார்க்க முடிந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஜான்வி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.