மறைந்த நடிகை ஸ்ரீதேவி, போனி கபூர் தம்பதிகளின் மகளும் பிரபல நடிகையுமான ஜான்வி கபூர் நியூயார்க்கிலுள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சியில் ஈடுபடும் கிளுகிளுப்பான வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாட்சாத் ஜான்வி கபூரே பதிவிட்டுள்ளார்.

தடக் படத்தின் மூலம் இந்தியில் எண்ட்ரி கொடுத்த ஜான்வி கபூர் அடுத்து ஒரே ஒரு இந்திப்படத்தில் மட்டுமே கமிட் ஆகி மிக நிதானமாக படங்கள் செய்துவருகிறார். 22 வயதான அவர் சமீபத்தில் தனது திருமண ஆசையை வெளியிட்டிருந்தார். அந்தத் திருமணம் முழுக்க தன் தாய்வழி சமூகமான தமிழ் முறைப்படி இருக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். அந்தப் பதிவை ஒட்டி அவர் கண்டிப்பாக மிக விரைவில் தமிழ்ப் படங்களில் நடிக்கக்கூடும் என்றும் முதல் படமே அவரது தந்தை அஜீத்தை வைத்துத் தயாரிக்கும் ஹெச்.வினோத்தின் படமாக இருக்கக்கூடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அச்செய்திகளுக்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காத ஜான்வி கபூர் தனது சகோதரி குஷி கபூர் மற்றும் தந்தை போனி கபூருடன் நியூயார்க்குக்கு சென்றுள்ளார். சென்றிருப்பது குடும்பச் சுற்றுலா என்றாலும் ரெகுலராக ஜிம்முக்குச் செல்லும் தன் கடமையிலிருந்து கொஞ்சமும் பின் வாங்க விரும்பாத ஜான்வி நேற்று முன் தினம் ஞாயிறு ஓய்வு நாள் என்றும் பாராமல் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டதை வஞ்சகமில்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஃப்ளைட் புடிச்சாவது அந்த ஜிம்முல ஜாயின் பண்ணனும்னு தோணுமே பாஸ்?

View this post on Instagram

Hardworking baby

A post shared by This Id is tribute to SRIDEVI (@janhvi.kapoor.updates) on Sep 29, 2019 at 4:53am PDT