விஜய் டிவியில், எத்தனை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. முதல் சீசன் துவங்கும் போது, இந்த நிகழ்ச்சிக்கு ஒரு சிலர் மத்தியில் எதிர்ப்பு துவங்கினாலும், பின் அனைவராலும் ஏற்று கொள்ள பட்டது. 

மேலும் இந்த நிகழ்ச்சியில், எப்போது ஸ்வாரஸ்ய சண்டைகள் வரும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் கூட. இதுவரை பிரபலங்களை, சினிமாவில் மட்டுமே பார்த்த ரசிகர்கள், பிக்பாஸ் மூலம் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள முடியும். சில பிரபலங்கள் கடும் விமர்சனங்களை சந்தித்தாலும், சில பிரபலங்கள் ரசிகர்களின் ஆழ் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள். 

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளதாக, கமல்ஹாசன் நடித்த ஒரு ப்ரோமோ  வெளியாகியுள்ள நிலையில், இதில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் உலாவி வருகிறது. சிலர் வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த போதிலும், பலர் இதுவரை பிக்பாஸ் குறித்து மூச்சே விடவில்லை.

இந்நிலையில்.. 'ஓகே ஓகே' படத்தில் தேனடையாக நடித்து ரசிகர்கள் மனதில் காமெடி நடிகையாக பதிந்த ஜாங்கிரி மதுமிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளார். சமீபத்தில் தான் இவர், உறவினரும், உதவி இயக்குனருமான ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

எப்போதும் கலகலப்பாக  இருக்கும் இவர், மனதில் பட்டத்தை தைரியமாக பேசும் குணம் கொண்டவர். சண்டைக்கும் சளைத்தவர் இல்லை என்பது இவர் ஏற்கனவே பக்கத்துக்கு வீட்டு பெண் ஒருவர் தன்னை தாக்கிய போது, கோபத்தில் அவருடைய கையை கடித்தார். இந்த பிரச்சனை காவல் நிலையம் வரை சென்று பின் ஓய்ந்தது. எனவே எதிர்பார்த்ததை விட பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பிரச்சனைகளுக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்கப்படுகிறது.