janagaraj acting hero role

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் 90 களில் கலக்கல் காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் ஜனகராஜ். அவருடைய வித்தியாசமான குரலும் பாடி லேங்வெஜூம் தற்போதும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காதது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின் சாருஹாசன் முக்கிய வேடத்தில் நடித்து வரும் 'தாதா 87' என்கிற படத்தில் ஜனகராஜ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் ரீ என்ட்ரி ஆகவுள்ளார்.

ஹீரோவாக ஜனகராஜ்:

இதைத்தொடர்ந்து தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'தர்ம அவதாரம்' என்ற டைட்டிலில் தயாராகும் இந்த படத்தில் ஜனகராஜ் புதிய அவதாரம் எடுக்கவுள்ளதாவும், இந்த படத்தை 'தாதா 87' படத்தை இயக்கும் விஜய்ஸ்ரீ இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

கதாப்பாத்திரம்:

இந்த படத்தில் மிடில் கிளாஸ் தந்தை கதாப்பாத்திரத்தில் ஜனகராஜ் நடிக்க உள்ளதாகவும் சமூகத்தில் நடக்கும் அவலங்களை கண்டு ஆந்திரப்படும் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கதாப்பாத்திரம் நிச்சயம் பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு துவக்கம்:

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாக இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழுவினர்கள் திட்டம்மிட்டுள்ளதாக கூறப்படுகிறது.