Asianet News TamilAsianet News Tamil

வலிய உங்கள் தலைமீது நீங்களே இழுத்துப் போட்டுக்கொண்டீர்கள்! மதுவந்திக்கு இசையமைப்பாளரின் கோரிக்கை!

பத்மா சேஷாத்திரி பள்ளி விவகாரத்தில், அடுத்தடுத்து பல பேட்டிகளில் எங்களுக்கும் பள்ளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்றும் பிராமணர்களை குறிவைத்து இந்த பிரச்சனை பேசப்படுவது போல், மதுவந்தி தொடர்ந்து பேசி வருவதற்கு, அறிவுரை கூறுவது போல் இசையமைப்பாளர், ஜேம்ஸ் வசந்தன் போட்டிருக்கும் பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது... 
 
james vasanthan requesting for madhuvanthi for school issue
Author
Chennai, First Published May 29, 2021, 7:34 PM IST

பத்மா சேஷாத்திரி பள்ளி விவகாரத்தில், அடுத்தடுத்து பல பேட்டிகளில் எங்களுக்கும் பள்ளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்றும் பிராமணர்களை குறிவைத்து இந்த பிரச்சனை பேசப்படுவது போல், மதுவந்தி தொடர்ந்து பேசி வருவதற்கு, அறிவுரை கூறுவது போல் இசையமைப்பாளர், ஜேம்ஸ் வசந்தன் போட்டிருக்கும் பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது... 

அன்புள்ள மதுவந்தி,

படித்த, வசதியான, ஒரு உயர்ந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்த, நல்ல திறமைசாலியான நீ உணர்ச்சிவசப்படாமல், கொஞ்சம் நிதானித்து, நம்மூர்ப்பக்கம் சொல்கிற மொழியில் சொன்னால் 'கொஞ்சம் சூதானமா' இருந்திருந்தால்..

"என் பாட்டியின் பள்ளியின் பெயர் கெட்டுப்போக விடமாட்டேன்" என்று நீ நினப்பது போலவே ஒரு பிரச்சனை இல்லாமல் போயிருக்கும். எப்ப இப்படி ஒரு அசம்பாவிதம் சில பெண் குழந்தைகளுக்குத் உங்கள் பள்ளியில் நடந்துவிட்டதோ, உடனே அந்தக் குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அந்தப் பெற்றோருக்கு ஆறுதல் சொல்லி, "அவனை விடமாட்டேன்" என்கிற தொனியில் மக்களிடம் ஒரு சிறு வேண்டுகோள் விடுத்து..

james vasanthan requesting for madhuvanthi for school issue

"இந்த இக்கட்டான நேரத்தில் என்னோடும், எங்கள் பள்ளியோடும் துணை நில்லுங்கள். இப்படி ஒரு தவறானவன் உள்ளே இருந்திருக்கிறான். அவன் செய்த தவறுக்கு அவனுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்காமல் விடமாட்டோம். இனி இப்படி நிகழாமல் பார்த்துக்கொள்வோம்!" என்கிற கோணத்தில் அணுகியிருந்தால், தமிழகமே கூட நின்றிருக்கும்.

அவசரம் அவசரமாக தந்தையும், நீயும் கொடுத்தத் தொடர் பேட்டிகளினாலும், அதில் ஒலித்த உங்கள் தவறானத் தொனியினாலும், "நாங்கள் பிராமணர், இந்துக்கள்" போன்ற தேவையற்ற விஷயங்களை இதற்குள் கொண்டுவந்ததால் இப்போது தேனீக்கூட்டைக் கலைத்ததுபோல ஆகிவிட்டது.

james vasanthan requesting for madhuvanthi for school issue

யாரைப் பற்றி எந்த அம்சத்தை இந்த சமூகம் விவாதிக்க வேண்டுமோ, எவனை எல்லோரும் திட்டித் தீர்க்க வேண்டுமோ, அவனை நோக்கி எல்லார் கோபமும் திரும்ப வேண்டுமோ, அதையெல்லாம் வலிய உங்கள் தலைமீது நீங்களே இழுத்துப் போட்டுக்கொண்டீர்கள். தவறு செய்தவன் ஒரு சிற்றறைக்குள் அமைதியாக இருக்கிறான். நீங்கள் ஊரெங்கும் அலைக்கழிக்கப்படுகிறீர்கள். 

இப்போதும், இதை இன்னும் அசிங்கப்படுத்தாமல், அலங்கோலப்படுத்தாமல், தேவையற்ற உயர்மட்ட உதவிகளைத் தேடி வெறித்தனமாக ஓடிக்கொண்டிராமல், கொஞ்சம் நிதானித்து, மக்களிடம் கனிவாக, பண்போடு பேசுங்கள்.  தவறு எவனுடையதோ, நீங்கள் எதற்கு அவமானப்பட வேண்டும்? அவனிடம் இருந்து எட்ட நின்று அந்தக் குழந்தைகள், பெற்றோர், மக்கள் பக்கம் நின்று சிந்தியுங்கள். உணர்ச்சிவசப்படாமல் இதை எளிமையாகக் கையாளுங்கள்! என இந்த சர்ச்சை விவகாரம் குறித்து தன்னுடைய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

james vasanthan requesting for madhuvanthi for school issue

உண்மையில் ஜேம்ஸ் வசந்தன் சொல்வது போல், மதுவந்தியும், அவரது தந்தையும்... மாணவிகளின் பிரச்சனையையும், அவர்களது பெற்றோரின் வேதனையையும் உணர்ந்து பேசி இருந்தால்... இவர்களுக்கு எதிராக பேசும் அத்துணை பேரும்... இவர்களுக்கும், இவர்களது பள்ளிக்கும் பக்க பலமாக இருந்திருப்பார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios