ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒட்டு மொத்த இளைஞர்களும் ஒன்று கூடி , ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.

தற்போது இவர்களின் தன்னெழுச்சி போராட்டத்தை நடிகர் சங்கத்தினர் கொச்சை படுத்தும் விதமாகவும், மீடியா மற்றும் பத்திரிகையாளர்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாக நடிகர்சங்கத்தினர் செயல் படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் தெரியவித்துள்ளனர் .

மேலும் தங்களுடைய போராட்டத்தை திருடி தான் நடிகர் சங்கத்தினர் தற்போது போராட்டம் நடத்தவுள்ளனர், உண்மையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இவர்கள் போராட்டம் நடத்த முன் வந்தால் எங்களோடு வந்து மெரினாவில் போராட்டம் நடத்தட்டும், இல்லை மதுரையில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ளட்டும் என கூறி வருகின்றனர் இளைஞர்கள்.

லாரன்ஸ்,சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ், மன்சூர் அலிகான்,அமீர் , இயக்குனர் கௌதமன் போன்ற பலர் தங்களுடைய ஆதரவை மக்களுடன் மக்களாக இணைத்து தெரிவித்து வரும் வேலையின் நடிகர் சங்கம் இப்படி நடத்த கூடாது இது தங்களுடைய போராட்டத்தை திருடும் நோக்கம் என கூறி நடிகர்சங்கதின் மீது உள்ள அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர் பல தமிழர்கள் .