jallikattu protest

இந்த வருடம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என்று ஒட்டுமொத்த இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மக்களும் ஒன்று திரண்டு போராடிய போராட்டம் வரலாறு காணாத ஒரு நிகழ்வாக அமைந்தது.

தற்போது இந்தப் போராட்டத்திற்குத் துணையாக நின்ற காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் இந்தப் போராட்டத்தின் வழக்கு குறித்து விசாரித்து வந்த நீதிபதி. ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய இடங்களான சென்னை, சேலம், மதுரை ஆகிய இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வந்தார்.

இந்த விசாரணை குறித்து செய்தியாளர்களிடம் கூறிய நீதிபதி, இந்தப் போராட்டம் குறித்து 1951 பேருக்கு பிரமாண பத்திரம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், 108 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் இந்தப் போராட்டத்தின் போது பணியில் இருந்த, காவல் துறையினர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும் சம்மன் அனுப்பப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் ராகவா லாரன்ஸ், மன்சூர் அலிகான் , ஜீ.வி.பிரகாஷ், நயன்தாரா உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.