வீராம் நிறைந்த நம் தமிழ்நாட்டு மக்கள் பொங்கலை விழாவாக பார்ப்பதை விட, தனது வீரத்தை வெளிப்படுத்த நேரம் வந்துவிட்டது என நினைப்பவர்கள் தான் அதிகம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தற்போது வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட தடை விதித்துள்ளது மத்திய அரசு. ஆனால் இந்த தடையை விளக்க கோரி மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதே போல் ஜல்லிக்கட்டு விளையாட வேண்டும் என்று தமிழர்கள் பலரும் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். பல அரசியல் தலைவர்களும் பாரம்பரிய விளையாட்டை தடை செய்ய கூடாது என குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் பதிவிட்டுள்ளார். ஆனால் இது போலி ட்விட்டர் கணக்கில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

எனினும் ஜல்லிக்கட்டு ஆதரவாக தான் அந்த வசனம் இருக்கிறது என்று பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.