என் வலி யாருக்குப் புரியும்? ஜூலியை கண்ணீர்விட்டு கதறவைத்த அந்த மரண சம்பவம்! தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம்...
ஜுலி என்றாலே பலருக்கு தெரிந்திருக்கும். ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் என பல தமிழ் ரசிகர்களுக்கும் பரிட்சயமாகி விட்டார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட போது நல்ல பெயர் இருந்தது. ஆனால் அதே பெயர் பிக்பாஸ் நிகழ்ச்சியால் நாறிப்போனது. அதையும் பொறுமையாக சமாளித்து எதிர்கொண்டார். அவருக்கு சில விளம்பர வாய்ப்புகளும் வந்தது.
இப்படிப்பட்ட ஜூலியை தமிழ் சினிமா விடுவதாக இல்லை. தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் ஜூலியை தனது “மன்னர் வகையறா” படத்தின் மூலம் அறிமுகபடுத்தினார் விமல். இதனை தொடர்ந்து “உத்தமி” என்ற படத்திலும் கமிட்டானார் ஜூலி. இந்நிலையில், மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு நிறைவேறாததால், தன் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அனிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார்.
அனிதாவின் மரணம், தமிழ்நாட்டையே உலுக்கியது. அவரைப் போன்ற தோற்றத்தில் நடிப்பதுபோல, 'பிக் பாஸ்' ஜூலி வெளியிட்ட போஸ்டர் வைரலானது.
தான் படிக்கவிருந்த மருத்துவப்படிப்பை காதலித்த அனிதாவிற்கு கிடைக்காத சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட போராளி அனிதாவின் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் மூலம் மக்களின் வெறுப்பை சம்பாதித்த ஜூலி நடிப்பதா? என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இதனால் கடுப்பான ஜூலி கடந்த வருஷம் அனிதாவின் மரணம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துச்சு. அனிதாவின் டாக்டராகும் லட்சியம் நிறைவேறாம போயிடுச்சு. அதனால வருத்தப்பட்டவங்கள்ல நானும் ஒருத்தி. இன்னிக்கு அனிதாவின் பிறந்த நாள். அவருக்கு ட்ரிப்யூட் பண்ற விதமா, இன்னிக்குப் படத்தின் போஸ்டரை என் சோஷியல் மீடியாவுல ரிலீஸ் பண்ணினேன் சமூகவலை தளங்களில் என்னை கேலி செய்வதை நான் கண்டுக்கவில்லை என்னோட வலி யாருக்கு புரியும்? ஒரு பெண்ணை இப்படி கேவலமாக சித்தரிப்பது தான் பண்பாடா என கண்கலங்கியுள்ளார்.
இதனை உறுதிப்படுத்திய தயாரிப்பாளர் ராஜா, ஜூலி அனிதாவாக மாறிவிட்டார். அனிதா வீடியோக்களை பார்த்துவிட்டு ஜூலி அழுதுவிட்டார். அவர் தான் இதற்கு சரியாக இருக்கும் என கூறினார். முதலில் லட்சுமி மேனனை நடிக்க வைக்கலாம் என பேச்சு வார்த்தை நடத்தினார்களாம். பின்னர் ஜூலியை கருத்தில் கொண்டு இதை செய்தார்களாம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததைவிட போஸ்டருக்கே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என கூறினார்.