எப்போதுமே எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல பேசி அனைவருடைய கோபத்திற்கும் ஆளாகும் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நேற்று முன் தினம் ஜல்லிக்கட்டுக்கு போராடி வருபவர்கள் மீது 1000 காளையை ஏவி விட வேண்டும் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

தற்போது முன்னனி நடிகர்களான அஜித், விஜய், கமல்,ரஜினி, போன்றோர் ஏன் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்கள் என்று தெரியவில்லை, இது மிருகவதை என்று அவர்களுக்கு தெரியாதா?’ என்பது போல் டுவிட் செய்தார்.

ஆனால், இந்த டுவிட்டை தற்போது டெலிட் செய்துள்ளார், இதில் எந்த நடிகர்கள் பெயரையும் அவர் குறிப்பிடாமல் டுவிட் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது .