உலக மக்கள் அனைவரையும் திருப்பிப்பார்க வைத்தது கடந்த மாதம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம்.

மெரீனாவில் தன்னெழுச்சியோடு அறப்போராட்டத்தில் இறங்கிய மாணவர்களின் போராட்டத்தின் பயனாக மத்திய மாநில அரசுகள் ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்றி இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கொடுத்தனர்.

இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலகினர் அனைவருமே ஆதரவு கொடுத்தனர். அவர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றியை மாணவர்களுடன் இணைந்து கொண்டாடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்த ராகவா லாரன்ஸ்.

அதன்படி நேற்று மாலை 1200 கிலோ பிரமாண்டமான கேக் வெட்டி ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை , ஜல்லிக்கட்டுக்கு போராடிய இளைஞர்களுடன் கொண்டாடினார். 

 மேலும் இது வரை 1040 கிலோ கேக் தான் உலக சாதனையாக பதிவான நிலையில் அதை முறியடிக்கும் வகையில் நேற்றைய கொண்டாட்டத்தில் 1200 கிலோ அளவில் கேக்கை வெட்டி கொண்டாடி உலக சாதனை படைத்துள்ளனர்.

மேலும் விழாவில் பேசிய நடிகர் லாரன்ஸ், 'ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் குடும்பங்களுக்கு தான் ஒரு மகனாக இருந்து அந்த குடும்பத்தின் குழந்தைகள் படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும், அவர்களுக்கு வீடு கட்டி தருவதாகவும் கூறியுள்ளார்.